செய்திகள்
வாக்காளர் பட்டியல்

வாக்காளர் சேர்ப்பு முகாமில் 6200 பேர் விண்ணப்பம்

Published On 2020-01-06 10:22 GMT   |   Update On 2020-01-06 10:22 GMT
ஈரோட்டில் வாக்காளர் சேர்ப்பு முகாமில் 6,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது . இதில், 600 மனுக்கள், நீக்கம், விலாசம் திருத்தம், எழுத்துக்களில் திருத்தம், தொகுதி மாற்றம் போன்றவைகளுக்காக வந்துள்ளன.
ஈரோடு:

மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 23ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்காக கடந்த டிச., 16 வரை பெறப்பட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நிறைவு செய்யப்பட்டு, கடந்த, 23ஆம் தேதி தனியாக வரைவு வாக்காளர் பட்டியலின் கூடுதல் பகுதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 4-ந் தேதி மற்றும் 5-ந் தேதிகளில் 2,213 ஓட்டுச்சாவடிகளை உள்ளடக்கிய, 912 மையங்களில் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்தது. இதில் அனைத்து முகாம்களிலும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், இதற்கான படிவங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றனர்.

பெயர் சேர்க்க படிவம் எண்.6, பெயர் நீக்கம் செய்ய படிவம் எண்.7, முகவரி, பெயர், புகைப்பட திருத்தம் செய்ய படிவம் எண்:8, பிற ஓட்டுச்சாவடிகளுக்கு முகவரியை மாற்றம் செய்ய படிவம்:8ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்கினார்கள் .

மேலும் இணைய தளத்திலும், மொபைல் ஆப் மூலமும், வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தங்களை மேற்கொண்டனர்.

இதுபற்றி, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. ஊரக பகுதியில் விடுபட்டவர்கள், இடம் மாற்றமாக இருந்தவர்கள் என ஆர்வமாக விண்ணப்பித்துள்ளனர். இதேபோல், விரைவில் நகரப்பகுதியில் உள்ளாட்சி தேர்தல் வரும் என்ற அடிப்படையிலும், அதிகபட்சமாக விண்ணப்பித்துள்ளனர்.

இதன்படி, மொத்தம், 6,200 விண்ணப்பங்கள் வரை மாவட்ட அளவில் பெறப்பட்டுள்ளது . இதில், 600 மனுக்கள், நீக்கம், விலாசம் திருத்தம், எழுத்துக்களில் திருத்தம், தொகுதி மாற்றம் போன்றவைகளுக்காக வந்துள்ளன.

மீதமுள்ள மனுக்கள், புதியவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.


Tags:    

Similar News