செய்திகள்
இன்று 2-ம் கட்ட தேர்தல் - ஈரோடு மாவட்டத்தில் 4 பஞ்சாயத்து தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடந்ததில் 4 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-ம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
மாவட்டத்தில் இன்று 130 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 7 யூனியன்களில் தேர்தல் நடந்தது. இதில் 4 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள புதூர், அந்தியூர் யூனியனில் உள்ள பச்சாம்பாளையம், சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள கொடுமணல், பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள செல்லப்பம்பாளையம் ஆகிய 4 பஞ்சாயத்துகளின் தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இந்த 4 பஞ்சாயத்து தலைவர்கள் நீங்கலாக 126 பஞ்சாயத்து தலைவர்களுக்கும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.