செய்திகள்
ஒரகடம் அருகே லாரி மோதி வாலிபர் பலி
ஒரகடம் அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்தமடம் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் செல்வகுமார் (வயது 26). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பருடன் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத்தில் இருந்து ஒரகடம் நோக்கி சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது தாம்பரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி சென்ற லாரி ஒரகடம் அருகே வளைவில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். விநாயக மூர்த்தி படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.