செய்திகள்
தீவிபத்து

அரக்கோணம் அருகே குடிசை வீடு எரிந்து நாசம்

Published On 2019-10-19 11:46 GMT   |   Update On 2019-10-19 11:46 GMT
அரக்கோணம் அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதில் 3 பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த மூதூரை சேர்ந்தவர் ரத்தினம் மனைவி சாவித்திரி (வயது 50). ரத்தினம் இறந்துவிட்டதால் தனது 2 மகள்களுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சாவித்திரி மற்றும் 2 மகள்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் சாவித்திரி வீட்டில் இருந்த கட்டில், பீரோ, வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

தீவிபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா? அல்லது காஸ் கசிவா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட அரசு நிவாரண பொருட்களை வழங்கினார்.
Tags:    

Similar News