செய்திகள்
வாலாஜாவில் காங்கிரசார் சீமான் உருவ பொம்மையை எரித்து போராட்டம் செய்த காட்சி.

வாலாஜாவில் சீமான் உருவபொம்மை எரித்து காங்கிரஸ் போராட்டம்

Published On 2019-10-16 12:02 GMT   |   Update On 2019-10-16 12:02 GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ராஜீவ் காந்தி படுகொலை குறித்து பேசிய சீமானை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

வாலாஜா:

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை காந்திசிலை அருகே நகர காங்கிரஸ் தலைவர் அண்ணாதுரை தலைமையில், சீமான் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர துணைத் தலைவர்கள் மோகன், இப்ராஹிம், மாவட்ட செயலாளர் ராணி வெங்கடேசன், நகர துணைத்தலைவர் மோகனசுப்பிரமணியம், நகர செயலாளர் பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலாஜி, எஸ்.சி.எஸ்.டி.பிரிவு காந்தி, புலவர் ரங்கநாதன் உள்பட 20 பேர் கலந்துகொண்டனர். அவர்களை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரசார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆற்காடு, உமராபாத் போலீஸ் நிலையத்தில் காங்கிரசார் சீமானை கைது செய்யக்கோரி புகார் அளித்தனர்.

Tags:    

Similar News