செய்திகள்
மூதாட்டி உயிரிழப்பு

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழப்பு

Published On 2019-10-14 16:21 IST   |   Update On 2019-10-14 16:21:00 IST
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரியவில்லை.

ஈரோடு:

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தங்கமணி (வயது 70) என்பவர் உடல் நலக்குறைவால் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி இறந்தார். அவரது பெயர் மட்டும் தெரிய வந்துள்ளது. ஆனால் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற மற்ற விவரங்கள் தெரியவில்லை. அவரது உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பிரேத கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Similar News