சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் - கமல் ஹாசன் இணையும் படத்தின் ப்ரோமோ அப்டேட்

Published On 2026-02-20 12:15 IST   |   Update On 2026-02-20 12:15:00 IST
ரஜினிகாந்த் - கமல் ஹாசன் இணையும் படத்தை இன்பநிதி தயாரிக்கிறார்.

கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுற்றது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தப் படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்றிரவு 7.12 மணிக்கு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில், ரஜினி மற்றம் கமல் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

போஸ்டரில் ரஜினி மற்றும் கமல் ஹாசனின் கைகள் ரெட்ரோ தோற்றத்தில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் போதிலும், இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே உள்ளது.

Tags:    

Similar News