செய்திகள்
வரட்டுப்பள்ளம் அணை

வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் உயர்வு

Published On 2019-10-14 15:54 IST   |   Update On 2019-10-14 15:54:00 IST
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் திடீர் கனமழையால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை 33.3 கன அடி கொள்ளளவு கொண்டது. வடகிழக்கு பருவ மழையை நம்பி அணை நிரம்பும். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது

இந்நிலையில் 18 அடியாக இருந்த நீர்மட்டம் 26 அடி உயர்ந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 514 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. மழையின் அளவு 75 மி.மீ. பொழிந்து உள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Similar News