செய்திகள்
கோப்பு படம்

ஈரோட்டில் பிரட் கம்பெனி விற்பனையாளர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2019-10-12 19:13 IST   |   Update On 2019-10-12 19:13:00 IST
ஈரோட்டில் பிரட் கம்பெனி விற்பனையாளர் தூக்கு போட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சேர்ந்தவர் பொன்சங்கர் (வயது 22). இவர் ஒரு பிரட் கம்பெனியில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பொன்சங்கர் தனது குடும்பத்தினருடன் ஈரோடு ஈ.வி.என் ரோடு அருகே குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த பொன்சங்கர் திடீரென தூக்கு மாட்டிக்கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பொன் சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பொன் சங்கர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News