செய்திகள்
பொறையாறு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
பொறையாறு அருகே வீட்டில் இரும்பு மேற்கூரை அமைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தரங்கம்பாடி:
காரைக்கால் கோட்டுச்சேரி ராயல்புரம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுகுமாறன் மகன் சுந்தர் (வயது 18), இவர் இரும்பு மேற்கூரை அமைக்கும் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பொறையாறு சந்திரபாடி மீனவர் குடியிருப்பில் செல்வமணி என்பவரது வீட்டில் இரும்பு மேற்கூரை அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்வயர் மீது கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி மேலே இருந்து கீழே விழுந்துள்ளார்.
அவரை உடனடியாக காரைக் கால் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். சுந்தரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.