செய்திகள்
வேலூர் சத்துவாச்சாரியில் பிரியாணி கடை உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலி
வேலூர் சத்துவாச்சாரியில் பிரியாணி கடை உரிமையாளர் மின்சாரம் தாக்கி இறந்தார்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி எஸ்.கே.எம்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது 60), காந்தி நகரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். மழை காரணமாக கடையில் மின்கசிவு இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை கடைக்கு வந்த அப்துல் ரஹீம் மின் விளக்கு சுவிட்ச்சை போட்டார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
அவரை மீட்டு சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
சத்துவாச்சாரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.