ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி மகள் திருமணத்திற்காக பரோலில் வந்தார். வேலூர் ஜெயிலில் உடமைகளை எடுக்க அனுமதி கேட்டு நளினி மனு அளித்துள்ளார்.
வேலூர் ஜெயிலில் உடமைகளை எடுக்க அனுமதி கேட்டு நளினி மனு
பதிவு: ஆகஸ்ட் 30, 2019 21:43
நளினி
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி மகள் திருமணத்திற்காக வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து பரோலில் வந்தார். சத்துவாச்சாரி புலவர் நகரில் தங்கியிருந்து மகள் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
பரோலில் வந்த பிறகு அவர் இரண்டு முறை வேலூர் ஆண்கள் ஜெயிலில் உள்ள அவரது கணவர் முருகனை சந்தித்து பேசினார். இந்த நிலையில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு நளினி மனு ஒன்று வழங்கியுள்ளார். அதில் வேலூர் பெண்கள் ஜெயிலில் தான் அடைக்கப்பட்டிருந்த அறையில் உள்ள எனது உடமைகளை எடுத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி மணி மாறனிடம் நளினி வழங்கினார். அவர் அந்த மனுவை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.