செய்திகள்
டி.என்.பாளையம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே வயிற்று வலி காரணமாக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி மாமல்லர் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 42). பிட்டர் வேலை செய்கிறார்.
இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பொன்னுசாமி குருணை மருந்து (விஷம்) குடித்து விட்டார்.
அவரை மீட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.