செய்திகள்
மழை

ஈரோடு மாவட்டத்தில் பெய்த பரவலான மழை - பவானிசாகரில் 32 மி.மீ. பதிவு

Published On 2019-08-09 11:35 GMT   |   Update On 2019-08-09 11:35 GMT
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. பவானிசாகர் பகுதியில் அதிக பட்சமாக 32.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

ஈரோடு:

கேரளா மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணைப் பகுதியான குண்டேரிபள்ளம், வரட்டுப்பள்ளம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2 -வது நாளாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து உள்ளது. சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. பவானிசாகர் பகுதியில் அதிக பட்சமாக 32.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் வனப்பகுதிகளில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இதேபோன்று நம்பியூர், கோபி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொடிவேரி பகுதியிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதே போன்று நேற்று இரவு மொடக்குறிச்சி கொடுமுடி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

ஈரோடு மாநகரை பொறுத்தவரை பெரிய அளவு மழை பெய்யாவிட்டாலும் நேற்று முழுவதும் சாரல மழை தூறிக்கொண்டே இருந்தது.

நேற்றிரவு ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில். வருமாறு:-

பவானிசாகர்- 32.4, எலந்தகுட்டைமேடு - 10.4, வரட்டுபள்ளம் - 9.6, கொடுமுடி - 8.8, குண்டேரிபள்ளம் - 7. 2, அம்மாபேட்டை- 4.4, பவானி- 4.2, ஈரோடு- 3.

Tags:    

Similar News