செய்திகள்
போராட்டம்

ஈரோட்டில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-08-08 11:46 GMT   |   Update On 2019-08-08 11:46 GMT
ஊதிய உயர்வு கேட்டு ஈரோட்டில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், தினமும் ரூ.100 வீதம் மாதம் ரூ.2600 என்ற சொற்ப ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்களாம்.

எனவே இதனை கண்டித்தும் தொழிலாளர்களை பணி வரன் முறைப்படுத்தி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இன்று வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் 200க்கும் மேற்பட்ட ஏ ஐ டி யு சி தொழிற்சங்கத்தினர் மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் திரண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல். சுந்தரம் தலைமை தாங்கினார். ஏ ஐ டி யு சி மாநிலச் செயலாளர் சின்னசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணி வரன்முறை படுத்தி ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் தலைமையில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Tags:    

Similar News