செய்திகள்
அறந்தாங்கியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.

அறந்தாங்கியில் கல்லணை கால்வாய்களை தூர்வார வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2019-08-03 11:57 GMT   |   Update On 2019-08-03 11:57 GMT
அறந்தாங்கி கோட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி:

அறந்தாங்கி கோட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அறந்தாங்கி, நாகுடி, பொன்பேத்தி, சுப்பிரமணியபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கல்லணை கால்வாய் பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த முறை மூன்று முறை காவிரி நிரம்பியும் காவிரி கடைமடை பகுதிக்கு தண்ணிர் வரவில்லை. ஆகையால் மேற்பனைகாடு எனும் பகுதி தொடங்கி மும்பாலை வரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வருகின்ற கல்லணை கால்வாய்கடைமடை பகுதி வாய்க்கால்கள் தூர் வார படாமல் முட்புதர்கள் மண்டியும்,கஜாபுயலின் போது வாய்கால் உட்பகுதியில் சாய்ந்த மரங்களாலும் பெரும் சேதமாகி உள்ளது. அதனை குடிமரமத்து பணியின் கீழ் தூர்வாரி சரி செய்து இப்பகுதி விவசாயம் காத்திட வேண்டும் என கூறினர்.

மேலும் மாவட்ட விவசாய சங்கத்தினர் கூறுகையில், அரசால் வழங்கபடும்தேசிய ஊரக வேலை வாய்ப்பு அனைவருக்கும் சமமாக வழங்கிட வேண்டும். அது போல் மாற்றுதிறனாளிகளுக்கும் வேலை வழங்கிட வேண்டும் என கேட்டுகொண்டனர்.

கூட்டத்தில் அறந்தாங்கி கோட்டாச்சியர் குணசேகரன், அறந்தாங்கி தாசில்தார் சூரிய பிரபு ஆவுடையார்கோவில் தாசில்தார் ஜமுனா மற்றும் பல்வேறுதுறை அதிகாரிகள் மற்றும் கல்லணை கால்வாய் கடைமடை பகுதி விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News