செய்திகள்
தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2019-07-24 23:28 IST   |   Update On 2019-07-24 23:28:00 IST
உடையார்பாளையம் அருகே வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம்:

உடையார்பாளையம் அருகே உள்ள வாணத்திரையான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 65). விவசாயியான இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் பல்வேறு டாக்டர்களிடம் காண்பித்தும் வயிற்று வலி குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த ராஜகோபால் நேற்று முன்தினம் விவசாய நிலத்திற்கு வைத்திருந்த பூச்சிமருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News