செய்திகள்
மதுரவாயலில் தண்ணீர் லாரி மோதி பெண் பலி
மதுரவாயலில் தண்ணீர் லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரூர்:
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி. இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கோயம்பேடு வந்தார். பின்னர் மதுரவாயலில் உள்ள மகன் வீட்டிற்கு செல்வதற்காக பூந்தமல்லி நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த தண்ணீர் லாரி முத்துலட்சுமி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேப்பம்பட்டைச் சேர்ந்த தண்ணீர் லாரி டிரைவர் முரளிமோகனை கைது செய்தனர்.