செய்திகள்
கோப்புப்படம்

குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழிசை சவுந்தரராஜன் யோசனை

Published On 2019-06-18 06:32 GMT   |   Update On 2019-06-18 06:32 GMT
கடல்நீரை குடிநீராக்கும் புதுமையான திட்டத்தை இஸ்ரேல் சென்று பார்த்து அதனை இங்கேயும் கொண்டு வர வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க.வின் அகில பாரத செயல் தலைவராக நட்டா செயல்படுவார் என்று பா.ஜ.க உயர்மட்ட குழு அறிவித்துள்ளது. அவர் இன்று மதியம் அதற்கான பொறுப்பு ஏற்க உள்ளார்.

அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநில தலைவர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நானும் செல்கிறேன். அவருக்கு வாழ்த்து சொல்லவும், அவருடைய வழிகாட்டுதலின் படி நடக்கவும் செய்வோம்.

அவர் ஏற்கனவே மத்திய, மாநில அமைச்சராக இருந்துள்ளார். பா.ஜ.க.வின் பொதுச்செயலாளராக பல நாட்கள் பொறுப்பு வகித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் அமித்ஷா வழிகாட்டுதல் அவருக்கு இருக்கும். அவருடைய அனுபவமும் பா.ஜ.க.விற்கு உறுதுணையாக இருக்கும்.

தண்ணீர் பிரச்சனை என்பது நிச்சயமாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நான் ஏற்கனவே கூறியபடி நடமாடும் கடல்நீரை குடிநீராக்கும் புதுமையான திட்டத்தை இஸ்ரேல் சென்று பார்த்து அதனை இங்கேயும் கொண்டு வர வேண்டும்.



தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போன்றவர்கள் தண்ணீர் பிரச்சனை பற்றி பேசுவதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News