செய்திகள்

அரசியல் கட்சியில் ஒற்றை தலைமைதான் இருக்க வேண்டும்- திருநாவுக்கரசர்

Published On 2019-06-10 07:04 GMT   |   Update On 2019-06-10 07:04 GMT
பொதுவாக அரசியல் கட்சிகள் ஒற்றை தலைமையின் கீழ் இருந்தால்தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். ஆனால் அவர்கள் தோல்வி அடைந்தனர். அதே போல் வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி அடைவார்கள். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார்.


காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி தொடர வேண்டும். அதுதான் எங்களது விருப்பமும், காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமும் ஆகும்.

பிரதமர் மோடி 2-வது முறையாக பிரதமர் ஆகி இருப்பதில் உலக அதிசயம் ஒன்றும் இல்லை. அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனை குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

ஆனால் பொதுவாக அரசியல் கட்சிகள் ஒற்றை தலைமையின் கீழ் இருந்தால்தான் சிறப்பாக செயல்பட முடியும். கட்சியின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News