செய்திகள்

ஆற்காட்டில் அரசு பஸ் கண்டக்டர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2019-06-06 20:44 IST   |   Update On 2019-06-06 20:44:00 IST
ஆற்காட்டில் அரசு பஸ் கண்டக்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆற்காடு:

ஆற்காடு டவுன் இனைவ் பஜார், கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 50). சென்னை மாநகர பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது மகன்களுடன் வசித்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்றார்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் ஜெகதீசன் அறை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மகன்கள் அறையை திறந்து பார்த்தனர்.

அப்போது ஜெகதீசன் அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்ட அவரது மகன்கள் அதிர்ச்சியடைந்து ஆற்காடு டவுன போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனின் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News