செய்திகள்

வேலூர் சத்துவாச்சாரியில் பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published On 2019-06-04 17:10 IST   |   Update On 2019-06-04 17:10:00 IST
வேலூர் சத்துவாச்சாரியில் பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி ஜெகன் நகரை சேர்ந்தவர் ஜான்ரூஸ்கின். இவரது 2-வது மகள் ஆலிவ்பிளசி சாரால் (வயது 15). இவர் 10-ம் வகுப்பு பொதுதேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

இந்த ஆண்டிற்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதையடுத்து ஆலிவ்பிளசி சாரால் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு சேர்ந்தார். காலை பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த ஆலிவ்பிளசி சாரால் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆலிவ்பிளசி சாரால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News