செய்திகள்

சோழவந்தானில் கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2019-05-12 20:23 IST   |   Update On 2019-05-12 20:23:00 IST
சோழவந்தான் அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்தார். இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சோழவந்தான்:

சோழவந்தான் அருகே உள்ள அய்யப்பன் நாயக்கன் பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் விஜி (வயது 43) விவசாயி.

இவரது மகள் லாவண்யா (19). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார்.

வீட்டில் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் லாவண்யா மட்டும் தனியே இருந்தார். மன உளைச்சலுடன் இருந்த அவர், அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். வெளியே சென்றிருந்த குடும்பத்தினர் வீடு திரும்பியதும் லாவண்யா, தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து காடுபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜோதிமுத்து தலைமையில் போலீசார் விரைந்து சென்று லாவண்யா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லாவண்யாவின் சகோதரர், இதே வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அதில் இருந்தே லாவண்யா, மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

ஒரே வீட்டில் அண்ணன்- தங்கை அடுத்தடுத்து தற்கொலை செய்திருப்பது அந்தப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News