செய்திகள்

குழந்தை இல்லாத பெண்ணிடம் பரிகாரம் என்ற பெயரில் 13 பவுன் மோசடி

Published On 2019-05-11 10:35 GMT   |   Update On 2019-05-11 10:35 GMT
கன்னியாகுமரியை சேர்ந்த குழந்தை இல்லாத பெண்ணிடம் பரிகாரம் என்ற பெயரில் 13 பவுன் நகையை மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்:

கன்னியாகுமரி மாவட்டம் கோவில் விளையைச் சேர்ந்தவர் அனீஷ். இவரது மனைவி ஜாஸ்மின் ஆஷா (வயது 30) இவர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

நான், கடந்த மாதம் (ஏப்ரல் 26-ந்தேதி) சாத்தூரில் உள்ள பெந்தே கோஸ்தே சபைக்கு வந்திருந்தேன். அப்போது ராஜ்குமார் (28) மற்றும் அடையாளம் தெரியக்கூடிய நபர் அறிமுகமானார்கள்.

அவர்கள் எனக்கு குழந்தை இல்லை என்பதை அறிந்து அந்த பகுதியில் உள்ள சின்னப்பன் குருசரடி ஆலயத்தில் நகைகளை வைத்து பரிகார பூஜை நடத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றனர். அதனை நம்பி 13 பவுன் நகைகளை கொடுத்தேன். அதனை வாங்கிச் சென்றவர்கள் நகையோடு மாயமாகி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ராஜ்குமார், ஏற்கனவே நகை திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருப் பது தெரியவந்தது. மற்றொரு வரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News