செய்திகள்
பள்ளிக்கரணை அருகே தேமுதிக பிரமுகரை வெட்டிய 4 பேர் கைது
பள்ளிக்கரணை அருகே தேமுதிக பிரமுகரை வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கரணை:
பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். தே.மு.தி.க. ஒன்றிய இளைஞர் அணி செயலாளர். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கிளைச் செயலாளர் கலைதாசன் மற்றும் நண்பர்கள் வெற்றி, பாலகிருஷ்ணன், சிட்டிபாபு ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள சமூகநல கூடத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த 10 பேர் கும்பல் சுரேஷ் உள்பட 5 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத், அருண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.