செய்திகள்

ஆறுமுகநேரியில் கவரிங் நகை வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல் - பறக்கும்படையினர் நடவடிக்கை

Published On 2019-04-28 17:08 GMT   |   Update On 2019-04-28 17:08 GMT
ஆறுமுகநேரியில் கவரிங் நகை வியாபாரியிடம் பறக்கும்படையினர் ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்து திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஆறுமுகநேரி:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆறுமுகநேரி கடலோர சோதனை சாவடியில் எட்டயபுரம் தனித்தாசில்தார் ராஜலெட்சுமி, ஆறுமுகநேரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை நடத்தினர். விசாரணையில் உடன்குடி அருகே உள்ள மெய்யூரை சேர்ந்த முகமது மகன் கவரிங் நகை வியாபாரியான ஷாகு பையிர் (வயது 41) என்பதும், ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது.

மேலும் கார் வாங்குவதற்காக சென்னையில் உள்ள தனது சகோதரரிடம் இந்த பணத்தை வாங்கிவருவதாகவும் அவர் கூறினார். ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படையினர் இந்த பணத்தை பறிமுதல் செய்து திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News