செய்திகள்

கள்ளப்பெரம்பூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்- டிரைவர் கைது

Published On 2019-04-27 15:04 IST   |   Update On 2019-04-27 15:04:00 IST
தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
வல்லம்:

தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் நான்கு ரோடு பகுதியில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்திவந்தது தெரியவந்தது.

விசாரணையில் டிரைவர் கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள ஆலக்குடியை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி (வயது35) என்பதும் நடுக்காவிரி பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து லாரியை பறிமுதல் செய்து தீபன் சக்கரவர்த்தியை கைது செய்தனர்.
Tags:    

Similar News