செய்திகள்

குஜிலியம்பாறை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி

Published On 2019-04-25 11:08 GMT   |   Update On 2019-04-25 11:08 GMT
குஜிலியம்பாறை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக பலியானான். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரியோடு:

குஜிலியம்பாறை, எரியோடு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் மழையும் பெய்தது. பருவ நிலை மாறி வருவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக மர்ம காய்ச்சல் பரவி வருவதால் அப்பகுதியில் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ராமகிரியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் துர்க்கேஸ் என்ற சீனிவாசன் (வயது 7). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சீனிவாசன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனைத் தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News