செய்திகள்

எடப்பாடி பழனிசாமி ஈஸ்டர் தின வாழ்த்து

Published On 2019-04-20 10:10 GMT   |   Update On 2019-04-20 10:10 GMT
அன்பின் திருவுருவமான இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை திருநாளாக கொண்டாடி மகிழும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #easterday #EdappadiPalaniswami

சென்னை:

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தியாகத்தின் மறுவுருவமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘பகைவர்களுக்கும் நன்மை செய்யுங்கள், அப்படி செய்வதனால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்’’ என்றுரைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கொடியவர்களால் சித்ரவதை செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக அனுசரித்து, அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் வாழும் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த புனித நாளில், உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும், சகோதரத்துவம் தழைக்கட்டும் என்று இறைவனை பிரார்த்தித்து, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #easterday #EdappadiPalaniswami

Tags:    

Similar News