செய்திகள்

அரிக்கன்மேட்டில் மணல் கடத்திய 3 பேர் கைது

Published On 2019-04-12 09:50 GMT   |   Update On 2019-04-12 09:50 GMT
அரிக்கன்மேட்டில் மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

புதுச்சேரி:

அரியாங்குப்பத்தை அடுத்த காக்காயந்தோப்பு அரிக்கன்மேட்டில் அகழ் வாராய்ச்சி மையம் உள்ளது.

இங்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தெற்கு போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம் உத்தரவின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை 4 மணியளவில் அரிக்கன்மேட்டுக்கு சென்றனர்.

அப்போது அங்கு மாட்டு வண்டி மூலம் மணல் ஏற்றிக் கொண்டு இருந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியது. இதில், 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஒத்த சார்லஸ் (வயது 30), கோவிந்தராஜ் (50), டெம்போ ராஜா (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய மணி (32), மாரியப்பன் (35), அய்யப்பன் (30) ஆகிய 3 பேரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News