செய்திகள்

சித்திரைக்கு முன்பே முத்திரை பதிக்கும் வெயில் - பொதுமக்கள் கடும் அவதி

Published On 2019-04-10 09:55 GMT   |   Update On 2019-04-10 09:55 GMT
மதுரையில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகிறது. #Summer
மதுரை:

தமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் கோடை காலம். இந்த காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

அதிலும் சித்திரையில் வரும் அக்னி நட்சத்திர காலம் வெயிலின் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது வெயில் எப்போதும் உச்சமாகவே உள்ளது.

புவி வெப்பமயமாதல், காற்று மாசு போன்றவற்றால பருவநிலை மாறிவிட்டது தான் காரணம். பங்குனியில் வெயிலின் தாக்கம் சாதாரணமாக இருக்கும் நிலை மாறி ஆரம்பத்திலேயே அக்னி நட்சத்திரம் போன்று வெயில் வாட்டி வதைக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் இரவில் கூட அதன்பிடியில் இருந்து மக்களால் விடுபட முடியவில்லை. சித்திரை தொடங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகமாகி வருகிறது.

மதுரை நகரில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகிறது. வெயிலுக்கு பயந்து பொதுமக்களும் காலை நேரங்களில் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். மாலையிலும் அதன் தாக்கம் உள்ளது.

வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள குளிர்பானம் கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர். #Summer
 
Tags:    

Similar News