செய்திகள்

தாய்-மகன் படுகொலை - கொலையாளிகள் பற்றி துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்

Published On 2019-04-09 16:51 IST   |   Update On 2019-04-09 16:51:00 IST
பள்ளிப்பட்டு அருகே தாய், மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கொளையாளிகள் பற்றி துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:

திருத்தணி அருகே உள்ள பி.டி.புதூரை சேர்ந்தவர் வனப்பெருமாள். இவர் திருத்தணியை அடுத்த இச்சி புத்தூரில் உள்ள தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி வீரலட்சுமி (வயது 45). மாற்றுத்திறனாளி. மகன் போத்தி ராஜா அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை வனப்பெருமாள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது அங்குள்ள அறையில் மனைவி வீரலட்சுமியும், மகன் போத்தி ராஜாவும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் பீரோ உடைக்கப்பட்டு 21 பவுன் நகை கொள்ளைபோய் இருந்தது.

இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. சேகர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொலையில் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் கொலையாளிகளை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

வனப்பெருமாள் பணியாற்றும் நிறுவனத்தில் அவரால் சிலர் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

கொலை நடந்த வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு இருக்கிறது.

அதில் கொலையாளிகள் பற்றி ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News