செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Published On 2019-04-09 07:39 GMT   |   Update On 2019-04-09 08:52 GMT
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கில் டியூசன் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PrivateTutions #GovtTeachers
சென்னை:

பணியிடமாற்றத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் பெற்று லாப நோக்கில் டியூசன் எடுக்கக்கூடாது. டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிடம் ஊதியம் பெறுபவர்கள் லாப நோக்கத்திற்காக டியூசன் எடுப்பது விதிமீறல். அரசை மிரட்டுவதற்காக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இளைய சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு கருணை காட்டக்கூடாது.

வழக்கு தொடர்ந்த தலைமை ஆசிரியர் ரங்கநாதன் 50 மரக்கன்றுகளை நட உத்தரவிடுகிறேன். மேலும், கோரிக்கை மனு தந்து தலைமையாசிரியையாக ஆன மல்லிகாவும் 50 மரக்கன்றுகளை நடவேண்டும்.



கல்வி நிலையங்களில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. எனவே, பள்ளி கல்லூரிகளில்  பாலியல் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு 8 வாரத்தில் இந்த இலவச தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்யவேண்டும். புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். #PrivateTutions #GovtTeachers
Tags:    

Similar News