செய்திகள்

தேனி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகை கொள்ளை

Published On 2019-03-30 15:04 IST   |   Update On 2019-03-30 15:04:00 IST
தேனி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:

தேனி அருகே சின்னமனூர், மார்க்கையன்கோட்டை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 55). சம்பவத்தன்று தனது மகனுடன் சின்னமனூரில் உள்ள வங்கிக்கு சென்று விட்டார். வெற்றிவேலின் மனைவி தனது வீட்டின் அருகே கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை பார்ப்பதற்காக கதவை தாழிடாமல் சாத்திச் சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த தங்க கொடி, கம்மல், டாலர், மோதிரம் உள்பட 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். வீடு திரும்பிய வெற்றிவேல் பொருட்கள் சிதறி கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News