செய்திகள்

திருச்சுழி அருகே நூதன முறையில் ரே‌ஷன் அரிசி திருடிய 6 பேர் கைது

Published On 2019-03-28 11:08 GMT   |   Update On 2019-03-28 11:08 GMT
திருச்சுழி அருகே நூதன முறையில் ரே‌ஷன் அரிசி திருடியதாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து ரே‌ஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, சர்க்கரை போன்றவற்றின் எடை குறைவாக இருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தன.

இதுகுறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது லாரிகளில் ரே‌ஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் மூடைகளில் இருந்து லோடு மேன்கள் சிலர் நூதன முறையில் திருடுவது தெரியவந்தது.

ஒரு மூடைக்கு 5 கிலோ வீதம் அரிசி மற்றும் சர்க்கரை போன்றவற்றை எடுத்து விற்று வந்துள்ளனர். இது தொடர்பாக நுகர்பொருள் வாணிப கழக பில் கிளார்க் தமிழ்குமார் (வயது34) தமிழ்பாடியைச் சேர்ந்த லோடுமேன்கள் முருகன் (35), மதுரைவீரன் (53), லாரி டிரைவர் அழகிரி (49) ஆகியோர் கைது செய்து செய்யப்பட்டனர்.

திருடப்பட்ட ரேசன் அரிசியை திருச்சுழி அருகே உள்ள நல்லாங்குளத்தைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் திருமால் (62) என்பவர் வாங்கி விற்றுள்ளார். அவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 கிலோ எடை கொண்ட 26 மூடை ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News