செய்திகள்

தர்மபுரி அருகே பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியர் கைது

Published On 2019-03-27 13:03 GMT   |   Update On 2019-03-27 13:03 GMT
தர்மபுரி அருகே பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தர்மபுரி:

தர்மபுரியை அடுத்த குப்பூர் பகுதியில் உள்ள எஸ்.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

சம்பவத்தன்று அவர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதுகுறித்து மாணவி யின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கா ததால் மாணவி மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவரும் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் கோபாலகிருஷ்ணன் என்பவர் மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியர் கோபால கிருஷ்ணனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குபதிந்து போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து மாணவியை மீட்டு தொப்பூர் அருகே உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

Tags:    

Similar News