கணவர் திட்டியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
தாராபுரம்:
தாராபுரம் அருகே உள்ள திருமலைபாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரிமளா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று பரிமளா தனது குழந்தைகளை அடித்து உள்ளார். இதனை ரங்கநாதன் கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பரிமளா மனவேதனை அடைந்தார். தனது வீட்டுக்கு எதிரே இருந்த கழிவறைக்கு சென்ற பரிமளா அங்கு தனது சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கழிவறைக்கு சென்று விட்டு வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது பரிமளா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அலங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரிமளா உடலை மீட்டு பிரே த பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிமளாவுக்கு திருமணமாகி 7 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.