செய்திகள்

பேரணாம்பட்டு அருகே கள்ளதுப்பாக்கியுடன் சாராய வியாபாரி கைது- உறவினர்கள் போராட்டம்

Published On 2019-03-16 10:13 GMT   |   Update On 2019-03-16 10:13 GMT
பேரணாம்பட்டு அருகே கைது செய்யப்பட்ட சாராய வியாபாரியை விடுவிக்ககோரி உறவினர்கள் போராட்டம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு வனசரகம் அத்திபட்டு மாமரத்து என்ற இடத்தில் வனசரகர் சங்கரய்யா, வனவர்கள் வேல்முருகன், அரி மற்றும் வனத்துறையினர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வனப்பகுதியில் 3 நபர்கள் துப்பாக்கியுடன் இருப்பதை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடிக்க சென்றனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

அதில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் கோட்டைசேரியை சேர்ந்த முரளி (38), என்பதும், அவருடன் வந்தவர்கள் அதே ஊரை சேர்ந்த ராமு (30), அனந்தகிரியை சேர்ந்த வெங்கடேசன் (35) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் கள்ள சாராயம் காய்ச்சுவது, வனவிலங்குகள் வேட்டையாடுவதை தொழிலாக கொண்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து முரளியை கைது செய்த வனத்துறையினர் அவரிடம் இருந்து லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கி, பைக் மற்றும் டார்ச்லைட், கந்தக மருந்து ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் முரளியை வனத்துறையினர் வேனில் ஏற்றிகொண்டு சென்றனர். அப்போது முரளியின் உறவினர்கள் வனத்துறையின் வேனை முற்றுகையிட்டு முரளியை விடுவிக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசாருக்கு வனத்துறையினர் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முரளி துப்பாக்கியுடன் சிக்கியதால் அவரை விடுவிக்க முடியாது என கூறி கூட்டத்தை கலைத்தனர்.மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News