செய்திகள்
மதுரையில் பெண்கள் அமைப்பினர் கருப்பு துணியால் கண்ணை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-03-16 10:01 GMT   |   Update On 2019-03-16 10:01 GMT
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #PollachiAbuseCase
மதுரை:

மதுரை மேலமாசிவீதி- தெற்கு மாசிவீதி சந்திப்பில் இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் சசிகலா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பொன்னுத்தாய், முத்துராணி, மனோகரிதாஸ், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் உள்ளிட்ட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி கோ‌ஷம் எழுப்பினர்.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை பாதுகாக்கும் கோவை போலீசாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து போராடி வரும் மாணவர்கள் மீதான அடக்கு முறையை கைவிட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

அதேபோன்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் மண்டல ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  #PollachiAbuseCase
Tags:    

Similar News