செய்திகள்

போடி அருகே வாகன சோதனையில் சிக்கிய ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா

Published On 2019-03-13 11:25 GMT   |   Update On 2019-03-13 11:25 GMT
போடி அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தலைமையிலான தனிப்படை பிரிவினர் தேனி மாவட்டம் போடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் சட்டவிரோதமான போதைப் பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து போடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த வாகனத்தில் சுமார் 40 பெட்டிகளில் குட்கா மற்றும் பான் மசாலா இருந்தது தெரிய வந்தது. இதனை கணேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் லாரி மற்றும் குட்காவை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் முக்கிய குற்றவாளியாக போடி ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த மகேஷ் ராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மகேஷ் ராஜா தலைமறைவாக உள்ளதால் அவரை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசால் தடை செய்யபட்டுள்ளது. குட்கா பான் மசாலா போன்றவை பெட்டி பெட்டியாக விற்பனைக்காக கொண்டு பதுக்கி வைத்துள்ள சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் கடத்தப்படுவதும் பதுக்கி விற்பனை செய்யப்படுவதும் குற்றச்செயலாகும். தற்போது கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருட்கள் வெளி மாநிலத்துக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என்றும் இந்த கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். #tamilnews

Tags:    

Similar News