செய்திகள்

கபிஸ்தலம் அருகே வாகனத்தில் மணல் அள்ளிய 2 பேர் கைது

Published On 2019-03-12 16:29 IST   |   Update On 2019-03-12 16:29:00 IST
கபிஸ்தலம் அருகே வாகனத்தில் மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் போலீசார் கபிஸ்தலம் பகுதிகளில் தீவிர ரோந்து சென்றனர்.

அப்போது வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்று கரையில் எந்தவித முன் அனுமதியும் இன்றி மணல் அள்ளிய வாகனத்தை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் மணல் அள்ளி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்து பாபநாசம் புது தெருவைச் சேர்ந்த சூர்யா (22) என்பவரையும், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (23) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News