செய்திகள்

தமிழகத்தில் 20 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி போட்டி - மாநில தலைவர் தகவல்

Published On 2019-03-11 06:13 GMT   |   Update On 2019-03-11 07:07 GMT
தமிழகத்தில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 20 இடங்களில் சமாஜ்வாதி கட்சி போட்டியிடும் என மாநில தலைவர் கூறியுள்ளார். #SamajwadiParty

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று சமாஜ்வாதி கட்சியின் மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

இதில் மாநில தலைவர் இளங்கோ யாதவ் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 20 இடங்களில் எங்களது கட்சி போட்டியிடும்.

குறிப்பாக மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிதம்பரம், சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூர் உள்பட 20 இடங்களில் போட்டியிடும்.

இந்த தொகுதிகளில் நடைபெறும் பிரச்சாரத்தில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்வார். தமிழகத்தில் மதசார்பற்ற கட்சிகள் எங்களை கூட்டணி அமைக்க அழைத்தால் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.

தமிழகத்தில் மதசார்பற்ற தி.மு.க. எங்களை அழைத்து பேசவில்லை. தமிழகத்தில் ஒரு தொகுதியில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம்.

உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், உத்ரகாண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். #SamajwadiParty

Tags:    

Similar News