செய்திகள்

21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் விருப்பமனு கொடுத்தவர்களிடம் மு.க.ஸ்டாலின் நேர்காணல்

Published On 2019-03-09 09:11 GMT   |   Update On 2019-03-09 09:28 GMT
21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். #MKStalin #DMK

சென்னை:

தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மற்றும் 21 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.

இதில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களை தொகுதி வாரியாக அழைத்து அண்ணா அறிவாலயத்தில் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொருவரையும், தனித்தனியாக அழைத்து அவர்களிடம் நேர்காணல் நடத்தினார். கட்சியில் எவ்வளவு காலம் பணியாற்றி இருக்கிறீர்கள்? இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உண்டா? தேர்தல் செலவு செய்ய பணம் உள்ளதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டார்.

ஒவ்வொரு தொகுதியிலும் விருப்ப மனு செய்தவர்களிடம் நேர்காணல் நடத்திய பிறகு அந்த தொகுதியின் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கருத்துக்கள் கேட்டார்.

 


திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஒட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திகுளம், ஓசூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று நேர்காணல் நடந்தது.

பரமக்குடி தொகுதிக்கு சம்பத்குமார், பாலு, சீதா ராணி, ஜெயமுருகன், தமிழ ரசி, வி.நக்கீரன், தங்கராஜ், பூமிநாதன், இசைவீரன், குமரகுரு, முருகேசன், கதிரவன், செல்வி, சஞ்சய் ஆகியோர் நேர்காணலுக்கு வந்திருந்தனர்.

சாத்தூர் தொகுதிக்கு மல்லி ஆறுமுகம், கடற்கரை ராஜ், சீனிவாசன், விளாத்திக்குளம் தொகுதிக்கு சோ.ரவி, நவீன், கலைச்செல்வி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்பட 20 பேர் வந்திருந்தனர்.

ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு மாடசாமி, சண்முகையா, சுசிந்தா, பூங்குமார், ராஜேந்திரன், காசிவிஸ்வநாதன், அனந்த், ஆறுமுக பெருமாள், இளையராஜா, பெரியகுளம் தொகுதிக்கு ஜீவா, பிச்சை, கணேசன், நாகலிங்கம், முத்துசாமி, காமராஜ், சரவணகுமார் உள்ளிட்ட 14 பேர் வந்திருந்தனர்.

பெரம்பூர் தொகுதி நேர்காணலில் ஜெயராமன், கமலக்கண்ணன், என்.வி.என். சோமு மகள் டாக்டர் கனிமொழி, தமிழ்வளன், தேவ ஜவஹர், ஆர்.டி.சேகர், மலர் விழி, இரா.கருணாநிதி, யுவராஜ், நரேந்திரன், ஆனந்த், முருகன், லோகநாதன், நெடுமாறன், ரவி ஆகிய 15 பேர் வந்திருந்தனர்.

இன்று 21 சட்டசபை தொகுதிக்கு நேர்காணல் நடைபெற்றதால் அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அந்தந்த தொகுதிக்கும் விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் மட்டுமின்றி அவர்களின் ஆதரவாளர்களும் திரளாக வந்ததால் அண்ணா அறிவாலயம் களை கட்டியது. #MKStalin #DMK

Tags:    

Similar News