செய்திகள்

கட்சியில் இல்லாதவர்களும் விருப்ப மனு அளிக்கலாம்- கமல்ஹாசன் அறிவிப்பு

Published On 2019-02-26 12:58 IST   |   Update On 2019-02-26 12:58:00 IST
மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினராக இல்லாதவர்களும் விருப்ப மனு விண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனுவினை கட்சியின் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையகங்களில் வருகிற 28-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

புதியதோர் தமிழ்நாட்டை உருவாக்க விழைவோர் இவ்விருப்ப மனுவைப் பெற்றுக் கொள்ளலாம்.


மாற்றத்தை விரும்புவோர் விருப்ப மனுவில், ‘தான் தகுதியானவர் என்று நினைப்பவரை பரிந்துரைக்கலாம் அல்லது தமக்கே அத்தகுதிகள் இருப்பதாய் நம்புபவர் இம்மனுவை சமர்ப்பிக்கலாம்.

மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினராக இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்ப மனுவைப் பெற விண்ணப்பத்தொகை ரூ.10 ஆயிரம் செலுத்துதல் அவசியம்.

விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், மக்கள் நீதி மய்யத்தின் சென்னை தலைமையகத்தில் வருகிற 7-ந்தேதிக்கு பிறகு கட்சியின் “தேர்தல் குழு” அறிவிக்கும் தேதியில் நடத்தப்படும்.

சாதனை என்பது சொல் அல்ல, செயல். நாளை நிகழப்போகும் மாற்றத்தை நமதாக்கிக் கொள்ள விரைந்து விண்ணப்பிக்கவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
Tags:    

Similar News