செய்திகள்

தருமபுரியில் இன்று காலை கடும் பனி மூட்டம்

Published On 2019-02-25 15:00 GMT   |   Update On 2019-02-25 15:00 GMT
தருமபுரியில் இன்று காலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
தருமபுரி:

தருமபுரியில் இன்று காலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது. குளிரும் வாட்டி எடுத்தது. காலை 7.30 மணி வரை 4 ரோடு, டவுன் பஸ் நிலையம், பென்னாகரம் மேம்பாலம், அதியமான் பை-பாஸ் ரோடு, நல்லம்பள்ளி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பனி பெய்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

ஓசூர் - தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையிலும் பனி அதிக அளவில் கொட்டியது. இதனால் லாரி, பஸ்கள், உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. 10 அடி தூரத்தில் உள்ள வாகனங்கள் கூட தெரியவில்லை. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்கினர். 

வழக்கமாக சேலத்தில் இருந்து தருமபுரிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணிக்குள் வந்து சேரும். இன்று காலை பனி அதிகமாக கொட்டியதால் அந்த பஸ்கள் காலதாமதமாக வந்தன.

மேலும் தொப்பூர் மலைப்பாதையில் ரோட்டின் இருபுறமும் உள்ள மரங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி அதிகமாக கொட்டியது.
Tags:    

Similar News