செய்திகள்

மார்த்தாண்டம் அருகே வங்கி மேலாளரை தாக்கி பணம் பறிப்பு

Published On 2019-02-14 11:53 GMT   |   Update On 2019-02-14 11:53 GMT
மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வங்கி மேலாளரை தாக்கி பணம் பறித்த 2 வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்:

மார்த்தாண்டம் பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரால்டு சிங்(வயது24). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்தில் இருந்து நல்லூர் சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லூர் பார்க் அருகே வரும் போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஜெரால்டு சிங் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் அவரது பையில் இருந்த ரூ.800 பணத்தை பறித்தனர். இதனை அவர் தடுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் ஜெரால்டை சரமாரியாக தாக்கினார்கள்.

இதில் படுகாயம் அடைந்த ஜெரால்டு சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் அந்த 2 வாலிபர்கள் ஜெரால்டு சிங்குக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

படுகாயம் அடைந்த ஜெரால்டுசிங்கை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசில் ஜெரால்டு சிங் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங் கம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெரால்டு சிங் கூறிய அடையாளத்தை வைத்து அந்த பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News