செய்திகள்

பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருப்பு - கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் திடீர் மறியல்

Published On 2019-02-09 09:12 GMT   |   Update On 2019-02-09 10:09 GMT
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் சரியாக இயங்காத காரணத்தால் பயணிகள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். #koyambedubusstand
போரூர்:

கோயம்பேடு பஸ் நிலையத்தில் செங்கல்பட்டு விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நேற்று இரவு 10மணி முதல் சரியாக இயங்காததால் பயணிகள் பல மணிநேரம் காத்திருந்தனர்.

இதுகுறித்து டெப்போவில் இருந்த போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நள்ளிரவு 12மணி அளவில் திடீரென்று பிளாட்பாரம் 1-ல் பஸ்களை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் காரணமாக அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல வழியில்லாமல் வரிசையாக காத்துநின்றன.

தகவலறிந்து வந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அவர் வெளியூர் பேருந்துகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதையடுத்து பயணிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #koyambedubusstand
Tags:    

Similar News