செய்திகள்

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது - போலீசார் விசாரணை

Published On 2019-02-07 15:19 IST   |   Update On 2019-02-07 15:59:00 IST
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ராயபுரம்:

கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் வேல்முருகன். ஆட்டோ டிரைவர். இவர், நேற்று இரவு கையில் காயமடைந்த தனது மகளை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்து வந்தார்.

ஆட்டோவை புறநோயாளிகள் பிரிவு வெளிப்புறம் நிறுத்திவிட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்குள் சென்றார்.

இரவு 11 மணியவில் வேல்முருகனின் ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆட்டோவின் அருகே ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் பெரிய அளவில் தீவிபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனை பாதுகாவலர்களும், போலீசாரும் இணைந்து ஆட்டோவில் பற்றிய தீயை பரவாமல் அணைத்தனர். எனினும் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது.

மர்ம நபர்கள் யாரேனும் ஆட்டோவுக்கு தீ வைத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News