செய்திகள்

போரூரில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது

Published On 2019-01-31 08:04 GMT   |   Update On 2019-01-31 08:04 GMT
கிண்டி, போரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து 3 சவரன் செயின், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
போரூர்:

கிண்டி, போரூர் டிரங்க் சாலையில் ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அவன் புது பெருங்களத்தூர், பாரதி நகர், கருமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்கிற சுரேஷ் கண்ணன் என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட குமரேசன் என்பவரின் கூட்டாளியாக இருந்ததும் தெரிந்தது.

தற்போது அவன் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளான். இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து 3 சவரன் செயின், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சுரேஷ் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் சுதா ராணி. சாப்ட்வேர் நிறுவன ஊழியர். இவர் பணிமுடிந்து தங்கி இருந்த விடுதிக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சுதாராணி கைப்பையை பறித்து சென்றனர். அதில் விலை உயர்ந்த செல்போன், பணம் இருந்தது.

இது தொடர்பாக 17 வயதுடைய 2 சிறுவர்கள் மற்றும் துரைப்பாக்கம், ராஜீவ் நகரை சேர்ந்த அருண்குமார் ஆகிய 3 பேரை செம்மஞ்சேரி போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News