செய்திகள்
திருவண்ணாமலையில் ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்
திருவண்ணாமலை கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேராட்டத்துக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். #JactoGeo
திருவண்ணாமலை:
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேராட்டத்துக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்றகோரியும், அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்களும் பணியை புறக்கணித்து புறப்பட்டு சென்றனர்.